தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் வன்முறைகள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மஹாபோதி அமைப்பு நடாத்திய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துகளை அமுல்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்கள் எங்களது சகோதரர்கள் எனவும், அவர்கள் நாட்டின் ஒரு பகுதியினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















