இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியுள்ளது – ஜேசன் கென்னி

kennyஇலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியுள்ளதாக கனேடிய அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். ரொரன்டோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குடிவரவு அமைச்சராக கடயைமாற்றிய காலத்தில் அதிகளவானவர்களுக்கு புகலிடம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், கனடாவில் புகலிடம் பெற்றுக்கொண்ட பலர் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிததுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பதனை விரைவில் தீர்மானித்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கனேடிய அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply