ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படைவீரருக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றச்சாட்டு

Blameஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையில் பணியாற்றும் படைவீரருக்கு எதிராக பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட படைவீரரே இவ்வாறு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஹெய்ட்டியின் லொகேன் என்ற நகரில் 18 வயது யுவதி ஒருவரை, இலங்கைப் படைவீரர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை பலவந்தப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.வீதிச் சோதனைச் சாவடியில் கடமையாற்றிய குறித்த வீரர், பெண்ணை ஆள் நடமாட்டமற்ற பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.

Tags: ,

Leave a Reply