களவாக ‘கள்’ குடித்து உள்ளாடையுடன் சென்ற விநோதம்

coconet-treeதென்னை மரத்திலேறி களவாக ‘கள்’ குடித்த இருவர் உள்ளாடையுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்ற விநோதமான சம்பவமொன்று பெந்தர கங்கைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது.

தென்னை மரத்திலேறி களவாக ‘கள்’ குடிப்போர் தொடர்பில் வீட்டு சொந்தக்கார் அவதானமாக இருந்துவந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு இருவர் அவருடைய தோட்டத்திற்குள் நுழைந்து தங்களுடைய உடையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு தென்னை மரத்திலேறியுள்ளனர்.

இதனை அவதானித்த வீட்டுசொந்தக்காரர் கழற்றிவைக்கப்பட்ட உடைகளை வீட்டுக்கு எடுத்துசென்றுவிட்டார்.

‘கள்’ குடித்துவிட்டு மரத்திலிருந்து இறங்கியவர்கள் தங்களுடைய உடைகள் காணாமல் போனதையிடுட்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் வேறு வழியின்றி உள்ளாடைகளுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விட்டுசென்ற ஆடைகளை வந்து எடுத்துச்செல்லுமாறு வீட்டு உரிமையாளர் கூறியனுப்பியபோதிலும் இதுவரையிலும் அவர்கள் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tags: , , ,

Leave a Reply