சிவகங்கை மாவட்டத்தில் நண்பரின் காதலியை காரில் கடத்தி பலாத்காரத்திற்கு உட்படுத்தி அந்த காட்சியை கையடக்க தொலைபேசியில் படம் பிடித்து மிரட்டிய 3 இளைஞர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். காதலனும் மிரட்டியதால் அவரையும் பொலிஸ் தேடி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா சாலையை சேர்ந்தவர், இந்த பாதிக்கப்பட்ட பெண் வயது 18. இவர் ஒரு தனியார் வைத்தியசாலையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த சரண்ராஜ் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது.
அவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பள்ளியின் பின்புறம் சந்தித்து பேசினர். இதை சரண்ராஜின் நண்பர்களான பாலாஜ, அழகேசன், பூபாலன் ஆகியோர் நோட்டமிட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் அந்தப் பெண் வேலை முடிந்து வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு சென்றார். அப்போது அழகேசன் ஒரு காரில் வந்து அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி தேவகோட்டை சங்கரபதிகாடு முனியய்யா கோவில் பின்புறம் கொண்டு சென்றார்.
அங்கு அந்தப் பெண் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அழகேசன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த பாலாஜி, பூபாலன் ஆகியோரும் ரக்சனாவை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இந்த காட்சிகளை அழகேசன் படம் பிடித்துள்ளார்.
வெளியே சொன்னால், எடுக்கப்பட்ட ஆபாசப்படத்தை வெளியிடுவோம் என்று அவர்கள் மிரட்டினார்கள். பின்னர் அழகேசன், பூபாலன் இருவரும் காரில் ஏறி சென்றுவிட்டனர்.
பாலாஜி அந்தப் பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி தேவகோட்டை ஆண்டவர் செட் அருகே இறக்கி விட்டுச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து தனது காதலன் சரண்ராஜை சந்தித்து கூறியுள்ளார் அந்தப் பெண்.
அதற்கு சரண்ராஜ், இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தினால் நமக்குத்தான் அவமானம் என்று கூறியதுடன் இதுபற்றி பொலிசில் புகார் செய்தால் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அந்தப் பெண் தனது தாயாரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினார். பின்னர் தேவகோட்டை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 3 இளைஞர்கள் மீது பலாத்காரம், கொலை முயற்சி வழக்கும் காதலன் சரண்ராஜ் மீது காதலித்து ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிகளிலும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
















