யாழ்ப்பாணத்தில் விசித்திரமான வகையில் தேர்தல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மக்களை பொருளாதார ரீதியில் தாக்;கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மர்ம மனிதர்களால் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றவர்கள் மற்றும் ஒழுங்கு செய்தவர்களின் தோட்டங்களுக்குள் சிலர் புகுந்து அவற்றைக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளனர்.
தோட்டங்களுக்குள் புகுந்தவர்கள் வாழை மரங்களை வெட்டி அழித்ததுடன் பீற்றூட் நாற்றுக்களையும் பிடுங்கி எறிந்துள்ளனர். அத்துடன் மாடுகளை பட்டியிலிருந்து திறந்து தோட்டத்திற்குள் விட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியிலேயே இவ்வாறான சம்பவங்கள் பரவலாக நடைபெற்றுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு வடக்கில் தற்பொழுது தேர்தல் நிலவரங்களை கண்காணிக்க வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தாவரங்கள்மீது தேர்தல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
















