அரசாங்கம் மறைமுகமான முறையில் தேர்தலில் தலையீடு செய்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் இடம்பெறும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தேர்தல் விடயங்களில் அரசாங்கம் மறைமுகமான முறையில் அரசாங்கம் தலையிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் சர்வதேசத்தை திருப்திப் படுத்தவே வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுகின்றது.
மேலும் வடக்கு மக்கள் சுதந்திரமான முறையில் தங்களது தலைவர்களை ஜனநாயக ரீதியாக தெரிவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.
இதேவேளை, வடக்கில் தேர்தல் நடத்தப்படும் ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடைய அனுமதிக்க மாட்டோம் எனவும் அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பழமையான தந்திரோபாயமாகும்.
அத்துடன் அரசாங்கம் சமூக சீரழிவுகளை கருத்திற் கொள்ளாது பொருளாதார நலன்களையே அதிகம் விரும்பி செயற்பட்டு வரவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















