வவுனியா நகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் க.கமாரசாமி ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நேற்று மாலை(17) இணைந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (புளொட்) உறுப்பினர் க.குமாரசாமி ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வவுனியா குருமன்காட்டில் உள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் அலுவலகத்தில் சுதேச வைத்திய மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்னிலையில் இணைந்து கொண்டார். அவருடன் வவுனியா பஸ்நிலைய வர்த்தகர் நலன்புரிச்சங்கத் தலைவரும் அவரது மகனுமாகிய கு.சஜிஸ்குமார் அவர்களும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துள்ளார்.
இவர்கள் இருவரும் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினர்களாவர். க.குமாரசாமி புளொட் அமைப்பு சார்பில் இரண்டு முறை வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதனும் அரசுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















