சுயாட்சி கோரிக்கையை ஏனையோர் பிரிவினை என்று கூறுவது ஏனென்று புரியவில்லை

thevahaதமிழர்களின் சுயாட்சி கோரிக்கையை முற்போக்கு கட்சிகளான நாம் ஏற்று கொள்கின்றோம் அதனை ஏனையவர்கள் ஏன் பிரிவினை வாதமாக பார்கின்றனர் என்று புரியவில்லை என சோஷலிச கட்சியின் செயலாளர் மஹிந்த தேவகே தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷ அரசுக்கு இந்த தேர்தலை நடத்த விருப்பம் இல்லை. வெளிநாட்டு அழுத்தத்தாலேயே அதனை தற்போது நடத்துகின்றது. 13+ வழங்க தயார் என்ற அரசு இன்று அதில் இருந்து பின்வாங்கியுள்ளது.

சம்பிக்க ரணவக்க விமல் வீரவன்ச போன்றவர்களுக்கு தெற்கு மாகாண சபை நல்லது வடக்கு தேர்தல் அவர்களுக்கு கசக்குது சிங்கள பௌத்த கொள்கைகளை கொண்ட அரசை தக்க வைப்பதே அவர்களின் நோக்கம். ராஜபக்ஷ அரசின் இந்த கொடிய நோக்கங்களை கொள்கைகளை நாம் தோற்கடிப்போம் போர் வெற்றியை கொண்டாடியும் அதற்கு உரிமை கோரியும் தெற்கில் தொடர்ந்து தாம் ஆட்சியில் இருக்கலாம் என்று நினைக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையை தென்னிலங்கையில் உள்ள இனவாத கட்சிகள் விமர்சிக்கும் அதேவேளை, தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு கட்சிகள் அதனை வரவேற்கின்றது.

அவர்களின் சுயாட்சி கோரிக்கையை நாம் ஏற்று கொள்கின்றோம். மற்றவர்கள் அதையேன் பிரிவினைவாதமாக பார்கின்றனர் என்று தெரியவில்லை.

தெற்கில் மாணவர் போராட்டம், விரிவுரையாளர் போராட்டம், தொழிற்சங்க போராட்டம், குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறைகளை அடுத்து அங்குள்ளவர்கள் இப்போது உணர தொடங்கியுள்ளார்கள்.

எம்மீதே இவ்வாறான அடக்கு முறைகளை மேற்கொண்டவர்கள் தமிழ் மக்கள் மீது எவ்வாறான அடக்கு முறைகளை மேற்கொண்டு இருப்பார்கள்.

இன்று மத்திய, வடமேல் மாகாணங்களில் கோடிக்கணக்கான பணம் தேர்தலில் புரள்கின்றது. பலர் விலைக்கு வாங்கப்படுகின்றனர். வடக்கில் அவ்வாறன நிலை இல்லை இங்கு அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளதால் இந்த தேர்தலில் பாரிய தேர்தல் வன்முறைகளில், மோசடிகளில் ஈடுப அரசு அஞ்சுகின்றது என மேலும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply