குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை – ரணில்

kp9தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குமரன்பத்மநாதனைப் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் இன்னமும் இந்தியாவின் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நபர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நபர்களை அரசியல் மேடைகளில் களமிறக்குவதன் மூலம் இந்தியா ஆத்திரமடையக் கூடிய அபாயம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply