தற்காலிக அடையாள அட்டையை இன்று பெறுவதற்கு ஏற்பாடு; தேர்தலில் வாக்களிக்க வசதியாக

sri-lanka-national-identity-cardவட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் இல்லாதவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கிராம சேவையாளர்களிடம் தேர்தல் திணைக்களத்தால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாத பலர் வடக்கில் இடம்பெற்ற நடமாடும் சேவையூடாக, விண்ணப்பித்திருந்தனர். 80 ஆயிரம் பேர் வரையில் விண்ணப்பித்திருந்த போதும் அவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் நாளை தேர்தலில் தேசிய அடை யாள அட்டை கிடைக்காத மக்களுக்கும் அல்லது வாக்களிப்ப தற்குச் செல்லுபடியான ஆவணங்களான கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஆள் அடையாள அட்டை, திணைக்களத்தால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, மதகுரு மாருக்கான அடையாள அட்டை
தற்காலிக மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டை இல்லாதவர்களும் தேர்தல் திணைக்களத்தின் தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

எனவே தற்காலிக அடையாள அட்டை தேவையாகவுள்ள வாக்காளர்கள் இன்று தங்கள் பகுதி கிராம சேவையாளர்களிடம் சென்று தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்காலிக அடையாள அட்டையைக் கிராம சேவையாளர்கள் வழங்க மறுத்தால் உடனடியாகத் தேர்தல் திணைக்களத்தின் 021 222 2655 தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply