குழந்தைகளை கடத்தி கொன்று சாப்பிட திட்டமிட்ட ஆசாமி

uk-morderகுழந்தைகளை கடத்தி, சித்ரவதை செய்து, கொன்று சாப்பிட திட்டமிட்டிருந்த இங்கிலாந்து சைக்கோ ஆசாமிக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போர்ட்வே (40). இவர் அமெரிக்காவின் மாசசூட்ஸ் நகரில் வசித்துள்ளார்.

குழந்தைகள் நடித்த ஆபாச படங்களை பார்ப்பதுதான் இவரது பொழுது போக்கு. இதை விற்பனையும் செய்துள்ளார்.

ஆயிரக்கணக்கான படங்களை பார்த்ததால், இவர் ஒரு கற்பனை உலகத்திலேயே வாழ்ந்துள்ளார். குழுந்தைகளை கடத்தி, பலாத்கார சித்ரவதை செய்து கொன்று சாப்பிட வேண்டும் என்ற அளவுக்கு இவரது சிந்தனை மாறியுள்ளது.

இணையத்தில் சாட் செய்யும்போது கூட, இவரது சிந்தனைக்கு ஒத்துபோகும் நபர்களிடம் மட்டுமே கலந்துரையாடியுள்ளார்.

குழந்தை ஆபாச படங்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க பொலிசார் கடந்த 2010ம் ஆண்டு இறங்கினர். அப்போது போர்ட்வே, பொலிஸ் வலையில் சிக்கினார்.

இவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 4,500 குழந்தை ஆபாசபடங்களை இணையத்தில் பார்த்ததற்கான ஆதாரங்கள் இவரது கனணியில் இருந்தன.

இது தவிர சத்தம் வெளியே கேட்காத அளவுக்கு இரகசிய அறை, இரும்புக் கூண்டு, சிறிய அளவிலான சவப்பெட்டி, இறைச்சி கடையில் பயன்படுத்தப்படும் டேபிள், கத்திகள் ஆகியவையும் இருந்தன.

சைக்கோவாக மாறிய போர்ட்வே, தனது எண்ணங்களை செயல்படுத்தும் நடவடிக்கைக்கு தயாராகி கொண்டிருந்ததை அறிந்த பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

போர்ட்வேவை கைது செய்த பொலிசார் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை போர்ட்வே ஒத்துக்கொண்டார்.

இவருக்காக வாதாடிய வக்கீல், ‘‘இணையத்தின் மூலம் கற்பனை உலகத்தில் போர்ட்வே மூழ்கியுள்ளார். ஆனால் குழந்தைகளை துன்புறுத்தும் திட்டங்களை செயல்படுத்த அவர் உத்தேசிக்கவில்லை.

உடல் நலம் குன்றியிருக்கும் போர்ட்வேக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போர்ட்வே, 27 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அதன்பின் அவரை இங்கிலாந்து அனுப்பவும் உத்தரவிட்டது. தீர்ப்பை கேட்ட போர்ட்வே மௌனமாக இருந்தார்.

Tags: ,

Leave a Reply