ஆஷாஷ் நகர் தீவிரவாதிகள் வசம்: எல்லையை மூடியது துருக்கி

sriyaசிரியாவில் ஜனாதிபதி பஷார்அல்– ஆசாத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக புரட்சிபடை உள்ளது.

இவர்கள் இராணுவத்துடன் போரிட்டு சில நகரங்களை தன்வசமாக்கி உள்ளனர். இவற்றை திரும்ப மீட்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு இராணுவம் ஈடுபட்டள்ளது.

அதற்காக புரட்சி படையுடன் கடுமையாக போரிட்டு வருகிறது. துருக்கி எல்லையில் அலெப்போ நகருக்கு அருகே ஆஷாஷ் என்ற நகரம் புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் தீவிரவாதிகள் ஆஷாஷ்நகரம் மீது ‘திடீர்’ தாக்குதல் நடத்தினார்கள். இவர்கள் ஆல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவை பெற்றவர்கள்.

பதிலுக்கு புரட்சி படையும் தாக்கியது. இருந்தும் இந்த நகரை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் துருக்கி அப்பகுதியில் உள்ள தனது எல்லையை மூடிவிட்டது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கலவரம் காரணமாக சிரியாவில் இருந்து ஏராளமானவர்கள் அகதிகளாக இந்த எல்லை வழியாகத்தான் துருக்கி சென்று அங்கு தஞ்சம் அடைந்தனர்.

தற்போது இந்த நகரம் தீவிரவாதிகள் வசமானதால் அதன் எல்லையை துருக்கி மூடி விட்டது.

Tags: , , , ,

Leave a Reply