சுயாதீன விசாரணைக்குழுவின் ஒழுக்காற்று விசாரணைக்கு தயார்! – மணி அறிவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், ஒழுக்காற்று விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனுப்பியிருந்த கடிதத்துக்கு அனுப்பியுள்ள பதிலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். ஆனால் இந்த விசாரணைகள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது ஒழுக்காற்று விசாரணையை நடத்தும் முன் அனுபவம் கொண்ட, கட்சி சாராத சுயாதீன அதிகாரியாக உள்ள குறைந்தது மூவர் கொண்ட குழு முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

அத்துடன் தன் மீதான ஒழுக்காற்று விசாரணை பொது மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள மணிவண்ணன், அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!