இங்கு வரும்வரை வன்முறைகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை; நோர்வே உயர் ஸ்தானிகர் கவலை வெளியீடு

norway2வடமாகாண சபைத் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் தங்களுக்குள் பிளவுபடாமல் ஒற்றுமையுடன் தமிழ் மக்களது உரிமைகளை வென்று அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நோர்வே உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நோர்வே உயர் ஸ்தானிகர் கிறேட் லொக்கன் மற்றும் கனடா பிரதிநிதி மெகான் வோஸ்டர் ஆகியோர் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை இன்று காலை 11 மணியளவில் ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர் அதன்போதே பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபைத் தேர்தல் நிலமைகள் தொடர்பில் அறியவும், எந்த கட்சிக்கு அதிக வாக்குரிமை கிடைத்துள்ளது, வெல்லப்போவது யார், இந்த தேர்தல் வன்செயல்கள் இன்றி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யபட்டுள்ளதா என்பவை தொடர்பில் கண்டறியவே நாம் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளோம்.

எனினும் எதுவித வன்செயல்களும் இடம்பெற்றதாக எமக்கு செய்திகள் கிடைக்கவில்லை ஆயினும் இங்கு வந்ததன் பின்னர் தான் வன்செயல்கள் இடம்பெறுகின்றமை தெரியவந்துள்ளது.

எனினும் இந்த தேர்தல் நீதியானதொரு தேர்தலாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கின்றோம். மேலும் எந்த கட்சிகள் வெற்றி பெற்றாலும் தங்களுக்குள் பிளவுபடாமல் ஒற்றுமையுடன் தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது முக்கியமானதொரு விடயம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலும் , தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர் என ஆயர் தெரிவித்தார்.

மேலும் இக்கலந்துரையாடலில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply