பாடசாலை மாணவியொருவருக்கும் பெளத்த பிக்கு ஒருவருக்கும் அறை வழங்கிய ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை அடுத்த வருடம் மே மாதம் 5 ஆம் திகதி அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அநுராதபுரம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தம்மிக ஹேமபால பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
800 ரூபாவுக்கு அறையொன்றை வழங்கி சமூகவிரோத செயலுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் இவ் விடயத்தை பொலிஸாருக்கு தெரிவிக்காமல் மறைத்ததற்காக தனுஷ்க சஞ்சீவ என்ற நபரை ஆஜர் செய்யும் படியே மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
















