24 மணித்தியாலங்களும் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கும் வேலைக்கு ஆட்களை திரட்டுகிறது நாசா

Nasa-1வேலை எதுவும் செய்­யால் ஓய்­வாக படுத்­து­றங்கி பொழுது போக்கிக் கொண்­டி­ருப்­ப­வர்­களை பலரும் திட்டித் தீர்ப்பர். ஆனால், இப்­ப­டி­யா­ன­வர்­களை நாசா வேலைக்கு அழைக்­கி­றது.

நாள் முழு­வதும் கட்­டிலில் படுத்­துக்­கொண்­டி­ருப்­ப­துதான் இவர்கள் செய்ய வேண்­டிய வேலை. நாசாவின் தலை­மை­ய­கத்தில் 70 நாட்கள் இவ்­வாறு படுத்­துக்­கொண்­டி­ருக்க வேண்­டுமாம். இதற்­காக மாதாந்தம் சுமார் 6 இலட்சம் ரூபா ஊதியம் வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மனித உடல்­களில் நுண்­ஈர்ப்­பு­வி­சையின் தாக்கம் குறித்த ஆய்­வுக்­காக இந்த ஆட்­சேர்ப்பு நடை­பெ­று­கி­றது.

தெரி­வு­செய்­யப்­படும் விண்­ணப்­ப­தா­ரிகள் தினமும் 24 மணித்­தி­யா­லங்­களும் சாய்­வான கட்­டிலில் படுத்­துக்­கொண்­டி­ருக்க வேண்டும்.

இதன்­போ­து­ அ­வர்கள் தொலைக்­காட்சி, இணை­யத்­த­ளங்­களை பார்க்­கவோ, வீடியோ கேம்ஸ் விளை­யா­டவோ முடியும் என நாசா தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆய்வு முடிந்­த­வுடன் இதில் பங்­கு­பற்­றி­ய­வர்­க­ளுக்கு இருவார புனர்வாழ்வு முகாமொன்றும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply