“நான் தெரியாதது போலிருக்கின்றேன் நீங்கள் காரியத்தைப் பாருங்கள் என ஜனாதிபதி எங்களுக்குக் கூறினார்”
2012ம் ஆண்டு, சிறுமிகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் பற்றியசம்பவங்கள் எமது ஊடகங்களில் அதிகமாக வெளிவந்தகாலம். இந்த அநீதியைப் பொறுக்க முடியாது சிலபெண்கள் பலசமூகநிறுவனங்களையும் தம்முடன் ஒன்றிணைத்து ‘பாதுகாப்பான இலங்கைக்கு பணியாற்றும் பிரஜைகள்’ (ஊவைணைநளெ கழச ய ளுநஉரசந ளுசi டுயமெய) என்னும் வலையமைப்பினை கொழும்பில் உருவாக்கினர். தனிநபர்கள், அமைப்புக்கள், குழுக்கள், வலையமைப்புக்கள் எனப் பலவிதமான அங்கத்துவம் கொண்ட இந்தவலையமைப்பு, எந்தவிதமானவன்முறையும் இன்றிசகலமக்களும் பாதுகாப்பாகவாழும் ஒருநாட்டினை உருவாக்கும் நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது. எங்கு அதிகார அசமத்துவங்கள் காணப்படுகின்றனவோ, எங்கு அவற்றின் அடிப்படையிலான அநீதியான கட்டமைப்புக்கள் நிர்மாணிக்கப் படுகின்றனவோ, அங்கு வன்முறை நிகழும் என்பதனால், பொதுவிலே வெளிப்படையான ஜனநாயகபூர்வமான கட்டமைப்புக்களுக்கும் பொறிமுறைகளுக்கும் போராடும் முழுக்க தன்னியலாளர்களைக் கொண்ட சகல இனத்தவர்களும் இணைந்த வலையமைப்பாயிற்று இது. கொழும்பில் உருவானாலும் கூட, தமது வலையமைப்பக்களின் ஆதரவினாலும், தொடர்புகளினாலும், இலங்கைபூராவும் இயங்கும் அமைப்பாக இது விரிந்தது.
பெண்கள் மீதான வன்முறையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக அரசுநிறுவனங்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்துவந்த இக்குழுவினருக்கு, பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் இனவாத வன்முறையும் இன்னொரு தலையிடியாயிற்று. தீவிரவாத பௌத்தபிக்குகள் எவ்வாறு அரசின் ஆதரவைப் பெற்று பலம் பொருந்தியவர்களாக ஆகின்றனரோ அதேபோன்று மிதவாதப் பிக்குகளைசிவில் சமூகத்தினர் ஆதரித்து பலப்படுத்தினால் என்ன என்று இவர்களுக்குத் தோன்றியது. அவ்வாறே பௌத்தபிக்குகளுடன் இணைந்து இயங்கியதில் பௌத்தசங்கத்தினரைப் பற்றி மட்டுமல்ல எமதுநாட்டில் இனப் பிரச்சினைக்கான தீர்வுகிட்டுமா என்பது பற்றியும் ஒருபுரிதல் இவர்களுக்கு ஏற்பட்டது என்று கூறலாம்.
புத்தபிரான், வாழ்க்கையை நடுநிலையுடன் அணுகுவதன்மூலம் அநீதிகளைத் தவிர்த்து உயிர்கள் மகிழ்வுடன் வாழும் ஒரு தத்துவத்தைத்தான் போதித்தார். ஆதனை சமயநிறுவனமாக ஸ்தாபிக்கவில்லை. இவ்வகையான தத்துவத்தினை நிறுவனமயப்படுத்த ஆரம்பித்தவுடன்தான் பிரச்சினைகள் தோன்றுகின்றன. சுhதாரணமாகவே நிறுவனங்கள் அதிகாரத்தினை வெளிக்காட்டுபவையாகும் (Pசழதநஉவiபெ pழறநச). அதில் சமயநிறுவனங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. மக்கள் மனதினை ஆட்கொள்ளும் சக்திவாய்ந்தவை என்பதனால் அவைவெளிக்காட்டும் அதிகாரம் பன்மடங்காகும். பௌத்தமதத்தைப் பொறுத்தவரையில் இன்னுமொருசிக்கலும் உண்டு. அது சடங்கு சம்பிரதாயம் பார்க்காது அறிவுரீதியாக மக்களை விழிப்புணர்வு செய்யமுயல்வதனால், சாதாரணமக்களின் ஆதரவு அதற்குக் குறைவாகவே கிடைக்கும். கடவுள் என்றால் எப்படி இருக்கவேண்டும்? நாம் கேட்டவரங்களை, அவை எவ்வளவு அநியாயமான கோரிக்கைகளாக இருந்தாலும்;, தரவேண்டும். எமது மனதைக் குடைந்து கொண்டிருக்கும் அர்த்தமில்லா தபயங்களைபேய் பிசாசுவிரட்டி ஆசுவாசப்படுத்த வேண்டும். நாம் கருதும் எதிரிகளுக்கு தீமைகளும் அழிவும்; விளைவிக்க வேண்டும். இதைச் செய்யமுடியாதவர் கடவுளாக மதிக்கப்பட மாட்டார். இந்தநிலையில் பௌத்தமதம் வாழ வேண்டுமாயின், அது அரசின் ஆதரவுடன்தான் நிலைநிறுத்தப்படலாம். அது எவ்வளவுதான் இந்துக் கடவுள்களை வரித்து அதன் மூலம் மனிதர்களின் அடிப்படை உணர்வுத் தேவைகளைக் கவனித்துக் கொண்டாலும், அரசின் ஆதரவின்றி நிலைக்கமுடியாது. இதனால், பௌத்த நிறுவனங்கள், நிறுவன மயப்படுத்தப்பட்டதால் மட்டுமன்றி, அரசின் அதிகாரத்துக்குட்பட்டதாலும் தமது அதிகாரத்தை அரசியல் ரீதியாகவும் வெளிப்படுத்த துணிகின்றன. அரசை இழப்பது அவற்றிற்கு தற்கொலை புரிவதற்கு சமனானது. இதனால்தான் அரசாட்சிக்கான அதிகாரத்தை வழங்கும் புத்தரின் தந்தத்தினை பௌத்தசங்க மேபாதுகாப்பா கவைத்திருக்கின்றது. புதிதாகப் பதவியேற்கும் எந்தத் தலைவரும் தலதாமாளிகைக்குச் சென்று வணங்கவேவேண்டும். மேலும், புத்தர் கூறிய தர்மவழியைப் பின்பற்றுவதற்கு ஓரிருவருக்கே இயலும் என்பதனால், பௌத்தநிறுவனங்கள் யாவையும் ஊழலும் பொய்யும் புரட்டும் மலிந்தவையாக மாறுவது தவிர்க்க முடியாததாகும்.
தென்னிலங்கையில் கிட்டத்தட்ட ஏழு மாவட்டங்களில் உள்ளவிகாரைகள், பிரிவெனக்கள் (இளம் பிக்குகளின் கல்விநிலையங்கள்) தாயகசபாக்கள் (விகாரையிலுள்ள அடியார் குழுக்கள்) ஆகியவற்றைப் பார்வையிட்டு உரையாடியதில் சிலயதார்த்தங்களைப் புரிந்து கொண்டது எமது பிரஜைகள் குழு. பௌத்தசங்கம் பலபிரிவுகளாக (நிக்காய) பிரிந்திருப்பதனால் அவர்கள் மத்தியில் ஒற்றுமை என்பது மருந்துக்கும் கிடையாது. ஒருநிக்காய எற்பாடு செய்யும் எந்தநிகழ்விலும் ஏனைய நிக்காயக்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். இதற்கான முக்கியகாரணம், இந்தநிக்காயக்கள் அனேகமாக சாதி அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டன என்பதாகும். பொதுபலசேன, இராவண பலய போன்ற தீவிரவாத அமைப்புக்களில் இயங்கும் பிக்குகள் அதிகமாக அமரபுர நிக்காயவிலிருந்து வந்தவர்களாவர். அமரபுரநிக்காய, தாழ்த்தப்பட்ட சமூகங்களிலிருந்து வரும் பிக்குகளை உள்ளடக்கியதாகும். இவர்கள் தமக்கு சமூகஅரசியல் அங்கீகாரம் போன்றவற்றை எதிர்பார்த்தே இவ்வகையான தீவிரவாத அமைப்புக்களில் சேருகின்றனரோ என எண்ணத் தோன்றியது.
பிரஜைகள் குழுவினர் மூலம் பௌத்தசாசனத்தை சகலமக்களும் சரிவரப் பின்பற்ற ஊக்குவிக்கும் வழிமுறைகள் யாவை என்கின்ற ரீதியில்தான் பிக்குகளுடனான கலந்துரையாடல்கள் எற்பாடு செய்யப்பட்டன. ஏற்பாட்டாளர்கள் அனைவரும் தன்னியலாளர்களான பிரஜைகள் குழுவினரே என்பதும் விளக்கப்பட்டது. ஆனாலும், சென்ற இடமெல்லாம் சந்தித்த பௌத்த பிக்குகள்பணம் தருவீர்களா, என்று கேட்டவண்ணம் இருந்தார்கள். விகாரையில் ஒருவித நிர்வாகக் கட்டமைப்பும் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பணமும் தனிப்பட்ட பிக்குவின் பைகளுக்குள் சென்றன. பணத்தினால் மிகமிக இலகுவாக ஆட் கொள்ளப்படுபவர்களாக இவர்கள் காணப்பட்டனர். அதுமட்டுமல்லாது, யாராவது ஒரு பொதுபலசேனா பிக்கு ஒருகேள்வி கேட்டால் போதும், உடனே நடுங்கி சகல எற்பாடுகளையும் ரத்து செய்பவர்களாகவும் காணப்பட்டனர். கொள்கை, கோட்பாடு என்பதை மருந்துக்கும் காணமுடியவில்லை.
ஒவ்வொரு விகாரையிலும் அங்கு வந்துவணங்கும் மக்களைக் கொண்ட அடியார் குழுக்கள் இருக்கின்றன. விகாரையின் நடப்புக்களை முன்னெடுப்பவர்கள், மற்றும் நிதிப்பங்களிப்புச் செய்பவர்கள் என்கின்ற காரணத்தினால் இக்குழுவினருக்கு கணிசமான அதிகாரம் உண்டு. ஆனால், இக்குழுவில் அனேகமாக முதிய பெண்களே உறுப்பினராக இருக்கக் காணப்பட்டனர். ஏனையோருக்கு இதில் மெனக்கெடநேரம் இல்லைபோலும். இப்பெண்களோ, தமதுபிக்குவானவர் கூறியதெல்லாம் வேதம் என்றிருப்பதனால், பிக்குகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் கண்டிக்கவும் ஒருகட்டமைப்பு விகாரைக்குள் இல்லாது போய்விட்டது.
இந்த அனுபவத்தில் கண்டு கேட்டகதைகளும் பலவுண்டு. இனங்களுக்கிடையில் திருமணங்களை நாம் ஊக்குவித்து சகலரையும் சிங்கள பௌத்தர்கள் ஆக்கினால் உண்மையான சமாதானம் மலரும் என்றார் ஒருவர். இன்னொரு பௌத்தபிக்கு பொதுபலசேன தம்மிடம் வந்து ஹலாலைப் பற்றி விளக்கிய அனுபவத்தைக் கூறினார். இது அரசாங்கம் பார்க்க வேண்டிய விடயமல்லவா, ஜனாதிபதியிடம் விளக்கினீர்களா என்றுதான் அவர்களிடம் கேட்டாராம். ஆமாம் ஜனாதிபதியைச் சந்தித்து சகலதும் விளக்கினோம். நான் தெரியாதது போலிருக்கின்றேன் நீங்கள் காரியத்தைப் பாருங்கள் என்று அவர் எங்களுக்குக் கூறினார் என்றாராம் அந்த பொதுபலசேன பிக்கு! பிரஜைகள் குழுவினர் சந்தித்த எல்லோரும் இந்தவகையானவர்கள் கூற முடியாது. சில (சிலமட்டுமே) உண்மையான பௌத்த பிக்குளும் ஆங்காங்கே காணப்பட்டனர்தான். ‘நீங்கள் பார்த்துக்கொண்டிருங்கள். இந்தவழியே நாங்கள் போனோம் என்றால் 15 வருடங்களில் இலங்கையில் பௌத்தசாசனம் அழிந்துவிடும்’ என்று மனம் மறுகிய வணக்கத்திற்குரிய பிக்கு ஒருவரும் உண்டு.
எப்படித்தான் இந்தச் சிக்கலிலிருந்து சிறுபான்மைத் தேசியங்களும் சமூகங்களும் மீளப்போகின்றோமோ?
ஆடி என்னடி உலகம், இதில் எத்தனைகலகம்
GTN-
















