“பள்ளிகளுக்கு வருவதைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!

மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதைவிட அவர்களின் உயிர்தான் முக்கியம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் மற்றும் சில அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களைப் படித்துவருகின்றனர்.

பள்ளிகள் திறப்பு பற்றி மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் உள்ளாட்சித் துறை உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் , பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமிதான் முடிவு எடுப்பார் என்றும், பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் எனவும் தெரிவித்தார் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!