முதல் நோயாளி யார்?

மினுவங்கொட பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையுடன் நேரடியாக தொடர்புகளைக் கொண்டிருந்த கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் தலைமை அதிகாரி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிச்சாலை மூலம் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று பரவலில் நோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் உள்ள வைரஸ் இதற்கு முன்னர் பதிவான நோயாளர்களின் வைரஸிலும் பார்க்க கூடுதலான செறிவில் (Concentrations) அமைந்திருப்பதாகவும் விசேட வைத்தியர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.

இதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. தொற்றின் ஆரம்ப கட்டத்தில் உடலில் தங்கியிருப்பது அல்லது வைரஸின் செயற்பாட்டுகளே காரணமென்று மதிப்பிடக்கூடியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த புதிய வைரஸ் நோய் தொடர்பில் எமக்கு கடந்த 10 மாத காலப்பகுதிகளாக அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இதனால் நோய் தொடர்பாக நூற்றுக்கு நூறு வீதம் தெளிவு இல்லை என்றும் கூறினார்.

மினுவங்கொட பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பெண் நோயாளி இந்த தொற்றின் முதலாவது நோயாளியாக இருக்க முடியாது. இந்த தொற்றின் முதலாவது நோயாளி இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த பெண் நோயாளிக்கு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. அன்றே அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உழியர்கள் மத்தியில் 20 நாட்களுக்கு பின்னரே நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

832 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஆரம்ப நோயாளியை அடையாளம் காண்பது மிகவும் சிரமம் என்றும் அவர் தெரிவித்தார். இன்று மேலும் பல நோயாளிகள் அடையாளம் காணப்படக்கூடும்.

அநுராதபுரம், பதுளை, காலி, குருநாகல், புத்தளம், பொலன்னறுவை, இரத்தினபுரி, மொனராகலை, தம்புள்ள உள்ளிட்ட பல பிரதேசங்ளில் இந்த மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களான உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!