புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, உடையார்கட்டு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகிய போது சற்று மந்தப்போக்கு காணப்பட்ட போதிலும் பின்னர் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டி வருவதாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இதுவரை எவ்வித தேர்தல் வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையெனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
















