நள்ளிரவில் பெண்ணை கொன்ற விவகாரம்: கொலையாளி கூறிய அதிரவைக்கும் காரணம்!

மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்னை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்ற மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தூரில் யாசகம் பெற்று விதிகளில் வசித்து வந்த பெண் மர்ம நபரால் கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சம்பவத்திற்கு முன் இரண்டு நாட்கள் கொலையாளி அந்தப் பெண்ணுக்குப் பின்னால் வருவதைக் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து சன்யோகிதகஞ்ச் காவல் நிலைய இன்ஸபெக்டர் ராஜீவ் திரிபாதி கூறியதாவது, கொலையாளி பெத்துலை சேர்ந்த 19 வயது இளைஞன் என கண்டறிந்தோம். அவன் ஏற்கனவே 2 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றவன் என தெரியவந்தது. அவனை சனிக்கிழமை கைது செய்தோம். தொடர்ந்து நான் குற்றவாளி இல்லை என மறுத்தான், இறுதியாக அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

தன்னுடன் தவறு செய்ய அப்பெண்ணுக்கு 400 ரூபாய் வழங்கியதாகவும், ஆனால் புதன்க்கிழமை அழைத்த போது அப்பெண் வர மறுத்ததாகவும், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் கொலையாளி விசாரணையில் கூறியுள்ளான். இதன் காரணமாக அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்ததாக கொலையாளி கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட 45 வயது பெண்ணின் பெயர் சுனிதா என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 19 வயது கொலையாளி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!