இந்தியாவின் சட்டிஸ்கரில் நலத்திட்ட பணத்திற்கு ஆசைப்பட்டு 5000 முறை திருமணம் செய்த ஆசாமியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சட்டிஸ்கரில் உள்ள ராஜ்னந்த்குன் பகுதியை சேர்ந்தவர் விஜய் கஜ்பையா, இவருக்கு வயது 47.
இவர் அரசு அறிவித்துள்ள நல திட்டங்கள் நிதி உதவிக்காக ஆசைப்பட்டு இதுவரை 5000 பெண்களை திருமணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு அரசு தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் இந்திய அரசாங்கம் ரூ 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்குகிறது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட விஜய், இதுவரை 5000 முறை திருமணம் செய்துள்ளார். இவர் அவருடன் திருமணத்திற்கு வரும் பெண்களுக்கு அவருக்கு கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை கொடுத்து அனுப்பிவிடுவாராம்.
பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள விஜய் மீது இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 420, 467 மற்றும் 468-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வரும் பொலிசார் விசாரணையின் முடிவில் தான் அனைத்து தகவல்களும் தெளிவாக தெரியவருமென கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
















