ஒன்றிணைந்த கட்சிகளின் கூட்டம் – அனந்தி வெளிநடப்பு; முன்னணி புறக்கணிப்பு!

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம். அனந்தி சசிதரன் வெளிநடப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை (17) 10.30 மணியளவில் ஆரம்பமானது.

இந்தக கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதற் தடவையாக வருகை தந்ததையடுத்து ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து வெளியேறினார். அத்துடன் சுமந்திரனின் வருகைத் தகவலை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த மாதம் அனைத்து தமழ் தேசியக் கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கட்சிகள் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இணைந்து செயற்படும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருந்தது.

இதன்படியே இன்றைய தினம் குறித்த ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளைஞன் மண்டபத்தில் இன்று ஆரம்பமானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!