ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவுத் தொடங்கியது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க ஏஞ்சலா மெர்கல்லுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மனியில் பிரதமர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஜெர்மனியில் கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெர்கல் (59) பிரதமராக உள்ளார்.ஜெர்மனியை வலிமையான பொருளாதார நாடாக உருவாக்கியது, வேலைவாய்ப்பின்மையை குறைத்தது உள்ளிட்ட நடவடிக்கை காரணங்களால் அவர் 3ஆவது முறையாக பிரதமராக வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், ஐரோப்பா கண்டத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது, ஜெர்மனியில் அதன் பாதிப்பு இல்லாமல் மெர்கல் திறமையாக ஆட்சி நடத்தியது அந்நாட்டு மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றுத்தந்துள்ளது.மெர்கலின் கூட்டணி கட்சி தான் பெருபான்மை பலத்துடன் இருப்பதாகவும்,ஆனால், யாருக்கு வாக்களிப்பது என்பதை கடைசி நிமிடத்தில்தான் முடிவெடுக்க உள்ளதாக, பலர் கருத்து தெரிவித்துள்ளதாக ஜெர்மனியில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
















