“தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து தெற்கு மக்கள், தெற்கு அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்ம்” விக்னேஸ்வரன்
“பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், காணி காவல்துறை அதிகாரங்கள் தெடர்பிலும் அரசுடன் பேசப்படும்”
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில விடயங்களில் அரசாங்கத்துடன் இணைந்தே தமது மாகாணசபை செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்பதன் மூலம், அரசாங்கத்துடன் கூட்டு சேர்வதாக அர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், காணி காவல்துறை அதிகாரங்கள் தெடர்பிலும் பேசப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து தெற்கு மக்கள், தெற்கு அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
















