முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியானது தென்பகுதி அரசியலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது.
நடந்து முடிந்த மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் இதுவரை காலமும் தெற்கில் மூன்றாவது சக்தியாக வலம் வந்த மக்கள் விடுதலை முன்னணியை பின்தள்ளிவிட்டு ஜனநாயக் கட்சியானது மூன்றாவது சக்தியாக வந்துள்ளது.
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக் கட்சியானது ஐந்து ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது. எனினும் இதுவரை காலமும் தெற்கில் மூன்றாவது சக்தியாக காணப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியானது வடமேல் மாகாணத்தில் மட்டும் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
















