தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

gk-vasanடெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சேது சமுத்திர திட்டம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழ்நிலையில் மத்திய அரசின் சொலீசிட்டர் ஜெனரல் மோகன் பராசுரன் விலகி இருப்பது அவரது சொந்த விருப்பமாகும்.

மேலும் இந்த வழக்கில் அவரது தந்தை கே.பராசுரன் எதிராக ஆஜர் ஆவதால் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அவரை கூறியுள்ளார். ஆகவே இதில் எந்த குழப்பமும் இல்லை.

இலங்கை வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது வரவேற்க தக்கது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: , ,

Leave a Reply