அனந்தி வீட்டின் மீதானதாக்குதல் உதயன் நாளேட்டை போலியாக வெளியிட்ட செயற்பாடுகளின் பின்னணியில் இராணுவம்

saarcஅனந்தி வீட்டின் மீதானதாக்குதல் உதயன் நாளேட்டை போலியாக வெளியிட்ட செயற்பாடுகளின் பின்னணியில் இராணுவம்: சார்க்நாடுகளின் தோ்தல் கண்காணிப்பு குழுவின் தலைவா் N.கேபாலசாமி

அனந்தியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உதயன் நாளேட்டை போலியாக வெளியிட்ட செயற்பாடுகள் போன்றவற்றின் பின்னணியில் இராணுவம் இருந்ததாக சார்க்நாடுகளின் தோ்தல் கண்காணிப்பு குழுவின் தலைவா் என் கேபாலசாமி கூறியுள்ளார்.

வன்முறைகளில் ஈடுபட்டவா்கள் கைது செய்து விசாரணை நடத்துமாறும் கோபலசாமி வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் தோ்தல் கண்காணிப்பு பணிகளை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய குழுவினா் இன்று மாலை ஊடகவியலாளா் மாநாடு ஒன்றை நடத்தினா்.

அங்கு விளக்கமளித்த கோபலசாமி வன்முறைகள் பதற்றமான சூழலில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டதாகவும் சுதந்திரமான தோ்தல் நடைபெற்றது என கூறமுடியாது என்றும் கூறினார்.

சில இடங்களில் தோ்தல் அமைதியாக நடைபெற்றது. ஆனாலும் நேரடியாக சென்று பார்ப்பதற்கு முடியாமல் போய்விட்டதாகவும் அவா் கூறினார். தோ்தலை கண்காணித்தமை தொடா்பான அறிக்கை ஒன்றையும் குழுவினா் ஆணையாளா் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளித்துள்ளனா்.

Leave a Reply