ஜேர்மன் பாராளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா 3வது தடவையாக வெற்றி

cdu-merkelஜேர்மனியில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இவரது கட்சி பெரும்பான்மை பெறாததால், கூட்டணி ஆட்சி ஏற்பட உள்ளது.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஜனாதிபதியாக இரண்டு முறை தேர்வானவர் ஏஞ்சலா மெர்கல், 59. தற்போது, ஜெர்மனியில் நடந்த பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்டார்.

நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி, 41 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

எதிர்த்து போட்டியிட்ட சோஷியல் ஜனநாயக கட்சி, போதுமான இடங்களை பெறவில்லை.

ஆட்சி அமைக்கும் அளவுக்கு கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, போதுமான இடங்களை பெறாததால், கூட்டணி ஆட்சி அமைககும் நடவடிக்கையில், ஏஞ்சலா ஈடுபட்டுள்ளார்.

இதற்காக, தோழமை கட்சிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

Tags: , ,

Leave a Reply