விமானத்தில் பயணிக்க ஏறிய பாம்பு: வெளியேற்றப்பட்ட பயணிகள்

Qantas_Airlinesஅவுஸ்திரேலியாவில் இருந்து, ஜப்பானுக்கு புறப்பட இருந்த விமானத்தில் பாம்பு இருந்ததால் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவின், சிட்னி விமான நிலையத்திலிருந்து, ஜப்பானின் டோக்கியோ நகருக்கு, 370 பயணிகளுடன, நேற்று முன்தினம், விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது, பைலட் அறையின் கதவருகில், 20 செ.மீ., நீளமுள்ள, பால் பாயின்ட் பேனா அளவிலான சிறிய பாம்பு நகர்வதை, விமான ஊழியர் ஒருவர் கவனித்தார்.

இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்த, 370 பயணிகள், அருகில் இருந்த விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

சிங்கப்பூரில் இருந்து வந்த இந்த விமானத்தில், பாம்பு பிடிக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனையிடப்பட்ட பின், நேற்று காலை .டோக்கி.யோவுக்கு புறப்பட்டு சென்றது.

Tags: , ,

Leave a Reply