சேது சமுத்திர திட்டம்: பழைய பாதையில் மாற்றம் இல்லை

sethuசேது சமுத்திர திட்டம் பழைய பாதையிலேயே செயல்படுத்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டில்லி செல்லும் முன் அமைச்சர் வாசன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இலங்கையின் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி தமிழர்களின் உரிமைகளுக்கும், வாழ்வாதாரத்திற்கும் அடித்தளமாக அமையும்.

சேது சமுத்திர திட்டம் பழைய பாதையிலேயே செயல்படுத்தப்படும்.

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து, சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் விலகியது, அவரது சொந்த விஷயம். அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

இவ்வாறு, வாசன் கூறினார்.

Tags: , ,

Leave a Reply