ஐக்கிய இலங்கைக்குள் போதியளவு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய ஓர் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மக்களின் ஜனநாயகத் தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய பிளவுபடாத நாட்டிற்குள் சுய கௌரவத்துடன் வாழவே தமி;ழ் மக்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் தீர்ப்பினை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்படும் எனவும் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண மக்களின் ஜனநாயக ரீதியான தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆதரவு பாராட்டுக்குரியது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
















