அதிகரிக்கிறது அரசு ஊழியர்களின் ஊதியம்!

கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஆண்டில் சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 21% அகவிலைப்படி கொடுக்கப்படும் என ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா பொதுமுடக்கத்தின் போது செலவினங்களை சமாளிக்க வேண்டும் என்பதால் உயர்த்தப்படவில்லை. அது 17%ஆக தொடர்ந்தது. இந்த நிலை 2021 ஜூன் மாதம் வரை தொடரும் என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் 2021 ஜூன் மாதத்திற்கு பிறகு 21% அகவிலைப்படியை மத்திய அரசு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இரண்டும் அதிகரிக்கும். அப்படி அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டால் 50 லட்சம் ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!