வடக்கிற்கு 13ஆவது திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என ராவணா பலய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதனைத் தொடர்ந்தே ராவணா பலய இவ்வாறு அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளது.
ராவணா பலய அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விக்னேஸ்வரனுக்கு தனி இராச்சியம் அமைக்க இடமளிக்க முடியாது. அவ்வாறு அரசாங்கம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்குமானால் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்று உருவாக்கப்படும். .
இருப்பினும் 13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிட்டால், இந்தியாவைப் பயன்படுத்தி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற்சிக்கும்.
எனவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றது என என ராவணா பலய மேலும் தெரிவித்துள்ளது.
















