பாரம்பரிய கலையான களரியை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து!

கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “களரிப்பயட்டு – ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு.

இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்கவேண்டும். இவ்விளையாட்டிற்கு அதிக உடல்திறனும் மன ஒழுக்கமும் தேவை.இதை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்திருப்பது,கிராம மக்கள் பங்கேற்க அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும். வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் ‘கேலோ இந்தியா’ திட்டத்தில், கட்கா, களரிப்பயிற்று, தங்-டா, மல்லர் கம்பம் ஆகிய நான்கு விளையாட்டுகள் தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!