வாசுதேவ நாணயக்கார இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகின்றார்.

Vasudevaதேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயரை சம்பாதித்துக்கொள்ளும் அதேவேளை, தமிழ் மக்களின் மனதுகளிலும் இடம்பிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிதுள்ளது.

தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய உணர்வு வலுப்பெற்றுள்மையை பிரதிபலிக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக பாரிய பொருட் செலவில் வடக்கு அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. எனினும் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் தமிழ்த் தேசிய உணர்வினை முடக்கக் கூடிய வகையில் அமையவில்லை. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை விடவும் அரசாங்கம் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. வாக்குகள் குறைவடைந்தமைக்கு மெய்யான காரணத்தை கண்டறிய வேண்டும்’ என தேர்தல் நிறைவின் பின்னர் வாசுதேவ அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அபிவிருத்தி என்பது பிரதான பாதைகளை காபட் செய்தல், இராணுவ ரெஸ்டுரண்ட்கள் அமைத்தல், கடன் வழங்குதலை முதனிலையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் வங்கிகளை ஆரம்பித்தல் போன்ற வாசுதேவவிற்கு பாரிய அபிவிருத்தியாக தோன்றியிருக்கலாம். எனினும், தங்களது வாழ்க்கையை கால்களினால் முடக்கி அபிவிருத்தி என்ற பெயரில் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அபிவிருத்திப் பணிகளில் வடக்கு மக்களை இணைத்துக்கொள்ளாது இராணுவத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த விடயத்தை அறிந்து கொண்டாலும், அது குறித்து கருத்து வெளியிட்டால் தமக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்காது என்ற காரணத்தினால் வாசுதேவ நாணயக்கார மௌனம் காத்து வருகின்றார். குழந்தைகளைப் போன்று கதைகளை அமைச்சர் கூறி வருகின்றார்.

ஒரே சமயத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நல்ல முகத்தை காண்பிக்க அமைச்சர் முயற்சிக்கின்றார். ‘வடக்கில் மாகாணசபையுடன் இணங்கி செயற்படக் கூடிய ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையின் மூலம் தமிழ் மக்களின் நல்லாதரவினையும் வேண்டி நிற்பதனை வாசு நிரூபித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்காத காலத்தில் ஆளுனர் பற்றி மூச்சுவிடாத, வாசுதேவ தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்துள்ள நிலையில் ஆளுனரை மாற்ற வேண்டுமென கோருவது எந்த வகையில் நியாயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை ஏமாற்ற முயற்சிக்கும் வாசுதேவ போன்றறோரினதும், ஜனாதிபதி போன்றோரினதும் முயற்சிகள் வெற்றியளிக்காது என்பதே வடக்கு தேர்தல் முடிவுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நன்றி: விகல்ப-

Tags: ,

Leave a Reply