திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்!

தினமும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில், பரபரப்புரையை மேற்கொண்ட அவர், விவசாயிகளுக்கான திட்டங்களை கவனமாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.

நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முன்னுதரமானமாக திகழ்வதாகவும், அவர் குறிப்பிட்டார். பவானி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை கட்ட உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். ஸ்டாலின் மக்கள் சபை கூட்டம் நடத்துவதால், எந்த பலனும் இல்லை என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, மக்களிடம் வாங்கிய மனுக்களில், எத்தனை பிரச்னைகளுக்கு ஸ்டாலின் தீர்வு கண்டார் என்றும், முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். டெண்டர் நடக்காத பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக, அமைச்சர்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டி வருவதாகவும், அவர் குறிப்பிட்டார். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல வழக்குகள் உள்ளன என்றவர், விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!