தேர்தலின் பின்னான திருவிழாவை படையினர் ஆரம்பித்தனர் – மல்லாகத்தில் கைகுண்டுத் தாக்குதல்

lk-armyவடக்கு தேர்தலை தொடர்ந்து கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளின் ஓர் அங்கமாக மல்லாகத்தில் மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்றிவு கைகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் இரவு 10.15 மணியளவில் மல்லாகம் ஞானப்பிரகாசர் சனசமூக நிலையத்திற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நடந்த சனசமூக நிலைய நிர்வாகம் கூட்டமைப்பின் வெற்றிக்காக பிரச்சார நடவடிக்கைகளினில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அதனை எச்சரிக்கும் வகையினிலேயே இக்குண்டு தாக்குதல் நடந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. இந்த தாக்குதலைஇராணுவத்தினரே மேற்கொண்டிருக்கலாம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் மல்லாகம் பகுதியில் தொடர்ச்சியாக பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் கூட்டமைப்பின் அமோக வெற்றியினைத் தொடர்ந்து கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீதும் மக்கள் மீதும் இத்தகைய வன்முறைச்சம்பவங்கள் அரசாங்கத்தினாலும் அதன் பங்காளிகளினாலும்; கட்டவிழத்து விடப்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Tags: ,

Leave a Reply