13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா

srilanka-india13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. மாகாணசபைத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் மற்றும் அதற்கு அப்பலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது. வடக்கு தேர்தல்களை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதேபோன்று 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் ஆக்கபூர்வமான முறையில் உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளது.

யதார்த்தமான இணக்கப்பாட்டின் மூலமே இரு இன சமூகங்களுக்கும் இடையில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply