வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவரே மீண்டும் உள்நாட்டுப் போருக்கு வழி அமைத்தவராவார் என்று தமிழ் நாட்டின் அரசியல் விமர்சகர்களில் ஒருவரும் ஊடகவியலாளருமான ஜி.சி.சேகர் தெரிவித்தார்.
தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியயான்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், தமிழ் மக்களின் இந்தத் தேர்தல் முடிவு, அங்கு நல்ல அரசியல் மாற்றத்தையோ அல்லது அரசியல் தீர்வையோ ஏற்படுத்தக்கூடியது என்று
எதிர்பார்க்க முடியாது. மாறாக தமிழ் மக்கள், ராஜபக்ஷவுக்கு எதிரான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றார்.
முள்ளிவாய்க்காலில் கொன்றொழித்த பின்னரும் நாங்கள் மானத்தோடு தான் இருக்கின்றோம் என்பதை அங்குள்ள ஈழத் தமிழர்கள் நிரூபித்திருப்பதாகத் தெரிவித்த இந்திய கம்யூனிஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் த.பாண்டியன், இந்தியாவில் நான் கேட்காததை ஈழத் தமிழர்களை கேட்கச் சொல்லி தூண்டமாட்டேன் என்று தெரிவித்தார்.
இறுதியில் கருத்துத் தெரிவித்த அரசியல் ஆய்வாளர் ஜி.சி. சேகர், நீங்கள் இந்த அணியுடன் தான் பேசவேண்டும் என்பதை தமிழ் மக்கள் ராஜபக்ஷவுக்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இதை எச்சரிக்கையாகவே அவர்கள் சொல்லியிருக்கின்றனர்.அவர்களுக்குரிய அதிகாரங்களை வழங்கவேண்டும். அதை வழங்காவிட்டால் மீண்டும் உள்நாட்டுப் போருக்கு வழிசமைத்ததாக அமைந்துவிடும் என்றார்.
















