அவதூறு வழக்கில் விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட்!

vijayakanthமுதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகாததால் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

விழுப்புரத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் விஜயகாந்த் 7 முறை ஆஜராகவில்லை.

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: , , ,

Leave a Reply