என்ன சாப்டறிங்க சார்? டீ, காபி , ஜூஸ் , சோடா…?
டீ கொடுங்க..
சிலோன் டீ, கிரீன் டீ , ஹெர்பல் டீ , ஐஸ் டீ ..இதுல எது வேணும் சார்?
சிலோன் டீ ப்ளீஸ்..
எப்படி குடிக்க விரும்பறிங்க.கருப்பு அல்லது வெள்ளை?
வெள்ளை.
காச்சிய பால் அல்லது பால் பவுடர்?
பால்.
ஒட்டக பால், மாட்டு பால் , ஆட்டுப்பால்?
மாட்டுப்பால்.
இனிப்புக்கு சக்கரையா தேனா? சார்.
சக்கரை
கிழங்கு சக்கரை அல்லது கரும்பு சக்கரை?
கரும்பு சக்கரை.
எந்த நிற சக்கரை ,வெள்ளையா, பழுப்பா , மஞ்சளா சார் ?
ஆணியே புடுங்க வேண்டாம்..நான் கேட்ட டீ ய மறந்துரு.போய் கொஞ்சம் தண்ணி கொண்டு வா குடிக்க.
சாதாரண தண்ணியா இல்ல மினரல் வாட்டர் ரா? சார்.
மினரல்.
எந்த மார்க்? சார் வேணும்..
ஆளவிடு, இங்க சாப்பிட வந்ததுக்கு அப்படியே தாகத்துல செத்து போறேன்.
-ஆதிரா
















