ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று (26) காலை தீவிரவாதிகள் அடுத்தடுத்து இரண்டு முறை தாக்குதல்களை நடத்தினர்.
ஹிராநகர் பொலிஸ் நிலையத்தில் நடத்திய தாக்குதலில் 5 பொலிஸார் உயிரிழந்தனர். சம்பா பகுதியில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தீவிரவாதிகள் இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் முழு உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வாரகால அரசுமுறைப் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பணத்தின்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் 29ம் திகதி மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மன்மோகன் சிங், நாவஸ் ஷெரீப் பேச்சு நடத்த உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
















