தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் காசி ஆனந்தனை இழிவுபடுத்துவதை கண்டிக்கிறது ஜனநாயக ஓருமைப்பாட்டு மையம்!

kasi-ananthanகவிஞர் காசி ஆனந்தனை கொச்சைப்படுத்தி செய்திகளை வெளியிடுவோருக்கு ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பின் வவுனியா கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் மக்களின் உரிமைகளை சிறிலங்கா பேரினவாத சக்திகள் மறுத்துவந்தமையால் தமிழ் மக்கள் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டு அதனை பெற்றுக் கொள்ள முனைந்தனர். அரசியல் ரீதியாக எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாது என கருதிய மக்கள் ஆயுதவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழர் தரப்புக்கு அரசியல் தீர்வை பெறுவதாக கூறி எல்ரிரிஈ, ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ, ஈரோஸ் என பல இயக்கங்கள் உருவாகின. அவற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் தவிர்ந்த(எல்ரிரிஈ) தவிர்ந்த இயக்கங்கள் அரசின் கைக் கூலிகளாக மாறின.

காட்டிப் கொடுப்புக்களையும் இன அழிப்புக்களையும் அரசுடன் இணைந்து மேற்கொண்டன. இந் நிலையிலெயே தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழரசுக்கட்சி, ஈபிஆர்எல்எவ், ரெலோ ஆகிய கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. தமிழரும் புலிகளும் இக் கட்சிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி ஆதரித்து வந்தனர். இந் நிலையில் புலிகளின் ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டனியும், புளொட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தன. மக்களும் அவர்கள் அரசுடன் இணைந்து செய்த காட்டிக் கொடுப்பக்களை மறந்து இணைத்துக் கொண்டனர்.

இவ்வாறு, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களை மன்னித்து தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குள் உள்வாக்கியிருப்பது தமிழ் தேசிய உரிமையை பெறவேண்டும் என்பதற்காகவே. அதை விடுத்து தேசியக் கொள்கையில் இருந்து விலகி கூட்டமைப்பு செயற்படுமாக இருந்தால் அதன் இறுதிக் காலம் இதுவாகவே அமையும். இந்த வகையில் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் தமிழ் தேசிய அரசியலையும் எமது போராளிகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுவது கவலைக்கரியதாகும். இது குழந்தை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினதற்கு சமானாகும். எனவே தமிழ் தேசிய அரசியலுக்காக சோரம் போகாது உறுதியாக நின்ற எமது கவிஞர் காசி ஆனந்தனை கொச்சைப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுவோரை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இச் செய்திகளை வெளியிடுவோர் தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராக அரசுடன் கைகோர்த்து இணக்க அரசியல் பற்றி சிந்திப்போர்கள் என்பதை எமது அமைப்பு இனங்கண்டு உள்ளது. அவர்கள் தற்போது புழைப்புக்காக அரசியல் நடத்துகின்ற வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளனர். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்கள் மத்தியிலும் தற்போதும் அரசின் கைக் கூலிகளாக மறைமுகமாக செயற்படும் இயங்கங்கள் மத்தியிலும் கவிஞர் காசி ஆனந்தன் ஒரு உன்னத மனிதரே என நாம் கருதுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply