எதிர்காலத்தில் ஈழத்திற்கான அரசியல் போராட்டம் ஏற்படும் – சம்பிக்க ஆரூடம்

ChampikaRanawakaவட மாகாண சபைத் தேர்தலை நடத்தியதன் மூலம் அரசாங்கம் அரசியல் ரீதியில் தவறிழைத்துள்ளதாக அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

´வட மாகாண சபை தேர்தலை நடத்தியதன் மூலம் பிரபாகரன் மேற்கொண்ட பொதுமக்கள் படுகொலைகளுக்கு சட்டரீதியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்ற சிக்கல் நிலவிய நிலையில் தேர்தல் நடத்தியமை தவறாகும்.

இது தமிழ் சுயாட்சிக்கு கைகொடுப்பதாகும். இதன் பிரதிபலன் மிகவும் ஆபத்தானது.

பிரபாகரனின் புதிய நாசிசம் இத்தேர்தலின் பின்னர் முன்னோக்கிச் செல்லும். அதன்மூலம் விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் ஒன்றுசேரும். நாட்டுக்கு வெளியில் தமிழ் ஆட்சிக்கான ஒன்றுசேரல் இடம்பெறும்.

நவநீதம்பிள்ளை வட பகுதிக்குச் சென்று ஈழ அரசாங்கம் ஒன்றை உருவாக்க சர்வதேச ரீதியில் உதவி வழங்கப்படும் என வடக்கு மக்களை உற்சாகப்படுத்த நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதற்கு எதிராக அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.

தமிழ் சமூகத்தில் ஜனநாயகம் இல்லை. அன்று பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து வாக்களித்தனர்.

இன்று வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்களை பார்த்து தமிழ் மக்கள் வாக்களிக்கின்றனர். வடக்கு இன்று தூதரகங்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இலங்கையில் வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஒன்றுசேர விடாது இந்தியாவும் தமிழ்நாடும் தடுத்துள்ளன. 2010ம் ஆண்டு தேர்தலைவிட கூட்டமைப்பு இம்முறை அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளது.

எதிர்காலத்தில் ஈழத்திற்கான அரசியல் போராட்டம் ஏற்படும்.

Tags: , ,

Leave a Reply