காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே அன்றி மாகாண அமைச்சிற்கு இல்லை என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கண்டி பிரதேச பொதுமகன் ஒருவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குறித்த மனுவை விசாரனை செய்த பிரதம நீதியரசர் மெஹான் பீரிஸ் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர ஆகியோர் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைய காணி அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது என தீர்ப்பில் உறுதிபட
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கு கண்டி நீதிமன்றத்தில் முன்னதாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு பின்னர் அது மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.
இதன்பின்னர் முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தலைமையிலான நீதியரசர்களின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாகாணசபைகளுக்கு சார்ப்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும் அந்த தீர்ப்பை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இன்று உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















