நவிபிள்ளை அறிக்கை குறித்து பொதுநலவாய அமைப்பு உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்

hrwபொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளினது வெளிவிவகார அமைச்சர்கள் குழு மனித உரிமை தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த எட்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கூட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இந்த கூட்டத்தின் போது இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தீர்மானம் எடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து பொதுநலவாய அமைப்பு உதாசீனப் போக்கை கடைபிடிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீம்பிள்ளை அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், அது குறித்து பொதுநலவாய நாடுகள் தலைவர் அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு இருந்தால் ´ஹரேரா´ பிரகடனத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்படின் பொதுநலவாய அமைப்பின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரம் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு உள்ளதாகவும் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply