தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது; கொமின் தயாசிறி

gomin_dayasriகாணி அதிகாரம் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது என சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கையில் சிக்கல்கள் காண்ப்படுகின்றது. நாட்டின் அரசியல் அமைப்பை கவனத்திற் கொள்ளாது உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,

அண்மையில் காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே உரியது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு இதனை உறுதி செய்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்பு குறித்து போதிய விளக்கமற்ற இந்தியர்களினால் 13ம் திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காணி அதிகாரக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொலிஸ் அதிகார கோரிக்கைகளுக்கும் சட்ட ரீதியான பதிலளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply