இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி ஒபாமாவை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, ”கடந்த சில நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்திய அணுசக்தி கழகத்திற்கும், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கும் இடையே இந்தியாவில் அணுசக்தி மின் திட்டம் அமைப்பது தொடர்பாக முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது” என ஒபாமா தெரிவித்தார்.
மேலும், ”இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த நான் உறுதி பூண்டு இருக்கிறேன். இந்தியா, ஆசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரிய சக்தியாக விளங்கி வருகிறது” என்றார்.
பிரதமர் மன்மோகன்சிங் கூறும்போது, ”பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்பகுதியாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பை எதிர்நோக்கி இருக்கிறேன்” என்றார்.
















